16.10.24
இன்றைய சிந்தனைக்கு
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது:
கற்பது என்பது நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் செய்கின்ற அனைத்திலிருந்தும், நாம் சந்திக்கின்ற நபர்களிடமிருந்தும் மற்றும் நாம் இருக்கின்ற சூழ்நிலையிலிருந்தும் நாம் பெருமளவு கற்கின்றோம். ஆனால் பெரும்பாலும் நாம் அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கின்றோம். நாம் பிரச்சனையை புரிந்துகொண்ட போதிலும் நம்மால் உண்மையான மாற்றத்தை கொண்டுவர இயலவில்லை.
செயல்முறை:
நான் ஒரு தவற்றிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன் என நான் சிந்திக்கும்போது, நான் உண்மையாகவே புரிந்துகொண்டுள்ளேனா அல்லது நான் கற்றுக்கொள்வதற்கு இன்னும் ஏதேனும் அதிகம் உள்ளதா என என்னை நான் கேட்பது அவசியமாகும். இது நான் அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யாமலிருக்க உதவுவதோடு இதுவே உண்மையான மாற்றத்திற்கான திறவுகோலாகும்.