17.04.25
இன்றைய சிந்தனைக்கு
கொடுப்பது
கொடுப்பதில் இருக்கும் உணர்வை புரிந்துகொள்வதென்றால் தொடர்ந்து சந்தோஷமாக இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து: பெரும்பாலும், நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, மற்றவர்கள் நமக்கு கொடுக்க வேண்டும் என எதிர்பார்கின்றோம். மற்றவர்களிடமிருந்து நாம் தொடர்ந்து உதவியை எதிர்பார்க்கும்பொழுது, நம்முடைய சொந்த வளங்களை பார்க்க நாம் தவறுகின்றோம். மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், நாம் மனம் தளர்ந்து, வாழ்க்கையில் திருப்தியின்மையை உணரும் போக்கு நம்மிடம் இருக்கிறது. மேலும் நாம் மற்றவர்களை குற்றம்சாட்டக்கூடும்.
செயல்முறை:
மற்றவர்கள் எனக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு பதிலாக, மற்றவர்களுக்கு என்னால் என்ன கொடுக்க முடியும் என்று சிந்திப்பது அவசியம். இன்று, நான் மற்றவர்களை சார்ந்து இருப்பதை குறைத்துக்கொள்வதைப்பற்றி சிந்திப்பேன். மேலும் என்னுள் இருக்கும் திறமைகளை பற்றி சிந்திப்பேன். என்னால் மற்றவர்களுக்கு அதிகமாக கொடுக்கமுடியும்போது, நான் அதிகமான வளர்ச்சியை காண்பேன்.