17.07.24
இன்றைய சிந்தனைக்கு
திடமான நோக்கம்
திடமான நோக்கத்தோடு செய்யப்படும் முயற்சியினால், வெற்றி பெறப்படுகிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் எவ்வளவு முயற்சி செய்தோம் என்பதுடன் வெற்றியை சம்பந்தப்படுத்தி பார்ப்பதற்கு பதிலாக, நமக்கு எவ்வளவு கிடைத்தது என்பதுடன் நாம், சம்பந்தப்படுத்தி பார்க்கின்றோம். அதனால், சிலநேரங்களில் நாம் எதிர்பார்ப்பது நிறைவேறவில்லையானால், நாம் வெற்றிபெறவில்லை என்று நினைப்பதால், எதிர்மறையாக சிந்திக்கும் மனப்போக்கு நம்மிடம் இருக்கிறது. இது, நாம் மீண்டும் முயற்சி செய்வதற்கு நமக்கு ஊக்கமளிக்கவில்லை.
செயல்முறை:
நான் வெற்றி பெறுவதில் திடமான நோக்கத்தோடு இருக்கும்போது, நான் சிறப்பாக செய்வேன். நான் எவ்வளவு கடினமாக உழைக்கின்றேன் என்பதை மற்றவர்கள் பார்க்கும்போது, என்னுடைய குறிக்கோளை நான் அடைவதற்கு அவர்களால் ஆன உதவியை செய்து எனக்கு உதவுவார்கள். நான் வெற்றி பெறுவதில் திடமான நோக்கத்தோடு இருக்கும்போது, நான் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றாலும், நான் வளர்ச்சிபெற்று, முன்னேறுகின்றேன்.