17.10.24
இன்றைய சிந்தனைக்கு
விவேகம்
விவேகத்துடன் இருப்பதென்பது வாழ்க்கையின் பரீட்சைகளுக்கு தயாராக இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
வாழ்க்கையிலுள்ள பரிட்சைகளுக்கு பொதுவாக அவற்றை சந்தித்த பின்னரே நாம் தயாராகின்றோம். நாம் கடினமாக முயற்சி செய்யும் போதிலும், சிறப்பாக தயாராகாமல் முன்னேறுவது என்பது சிரமமான ஒன்றாகும். என்ன நடக்கக்கூடும் என எதிர்பார்த்து முன்கூட்டியே சிறப்பாக தயாராகுவது என்பது நம்முடைய உள்ளார்ந்த வளங்களை சிறப்பாக பயன்படுத்துவதாகும்.
செயல்முறை:
தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கு, நான் முன்னரே என்னை சிறப்பாக தயாராக வைத்திருப்பது அவசியமாகும். பிரதிபலன்களை நான் ஆழமாக சிந்தித்து பார்க்கும்போதும், கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும்போதும் மட்டுமே என்னால் இதை செய்ய முடியும். இந்த உள்ளார்ந்த முன்னேற்பாட்டினால் என்னால் வாழ்க்கையில் உள்ள அனைத்து பரிட்சைகளையும் சந்திக்க முடியும். நிகழ்காலத்தை அனுகுவதற்கு என்னிடம் எனக்கு தேவையான அனைத்து திறமைகளும் இருக்கின்றன.