17.12.24

இன்றைய சிந்தனைக்கு......

அகநோக்கு:           

ஸ்தூல பொருள்சார்ந்த உலகின் பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பதே, முக்தி நிலையை கொண்டுவரும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

புறநோக்காக இருப்பது, வீணான சிந்தனைகளுக்கு இட்டுச்செல்லும்- அவை நமக்கு சந்தோஷத்தை கொடுக்காதவற்றை பற்றிக்கொள்ளும். பொருட்களானது, எவ்வாறாயினும் ஒரு நாளைக்கு நம்மை விட்டு சென்றுவிடும், அது போலவேதான், நட்பும் கூட, அது உடைந்துபோகலாம், அது துக்கத்தையும் வருத்தத்தையும் கொடுக்கலாம்.

செயல்முறை:

உண்மையான சந்தோஷத்திற்கும், முக்தி பெற்ற நிலையை அடைவதற்குமான ஒரே வழியானது, நமக்குள் இருக்கும் சந்தோஷம், அமைதி மற்றும் சக்தியை நாம் பார்க்க முனைவதாகும். இத்தனை வருடங்களாக நான் வெளியே தேடிக்கொண்டிருந்த, இந்த இனிமையான அனைத்தும், உண்மையில் என்னுள்தான் உள்ளது – இன்று முதல், அவற்றை நான் என்னுள் பார்க்கப்போகின்றேன்.