18.04.25
இன்றைய சிந்தனைக்கு
அன்பு
உண்மையான அன்பு என்பது மற்றவர்கள் வளர்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பெரும்பாலும், உறவுமுறைகளில், நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்து நாம் எதிர்பார்கின்றோம். இந்த எதிர்பார்புகள் அடுத்தவரை திக்குமுக்காடச் செய்யக்கூடும். மேலும் அவர்களுக்கு ஏற்ற சரியான முறையில் அவர்கள் வளர அனுமதிக்காமல், நம்மை தடுத்துவிடுகிறது.
செயல்முறை:
நான் நேசிப்பவர்களுக்கு சரியான சூழலை உருவாக்கும்போது, நான் உண்மையான அன்பை வெளிப்படுத்துகின்றேன். இந்த சூழலில் தான் அவர்களால் வளர முடியும். மேற்கொண்டு இதை நான் செய்வதற்கு, எனக்கு நெருக்கமாக இருப்பவர்கள், என் எதிர்பார்பின் படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நான் நிறுத்திவிட வேண்டும். அவர்களுடைய சொந்த வளர்ச்சி, அவர்களை எங்கு கொண்டு செல்லுமோ, அதற்கு நான் ஆதரவு கொடுப்பது அவசியம்.