18.07.24
இன்றைய சிந்தனைக்கு
சரியான வார்த்தைகளை பேசும்போது, லேசான தன்மையை பெறுகிறோம்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
சிலநேரங்களில், நம்முடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு புரிய வைப்பது கடினமாக இருக்கலாம். நாம் அதிகமாக பேசுகின்றோம், ஆனால், பெரும்பாலும், நாம் உண்மையில் அவர்களிடம் தெரிவிக்க வேண்டிய விஷயத்தை தெரிவிக்கவில்லை அல்லது அவர் நம் கருத்தை புரிந்துக்கொள்ளவில்லை. அப்போது, மேற்கொண்டு அதிகமாக பேசும் போக்கு இருக்கிறது. இது, சூழ்நிலையை மோசமாக்கி, சிலநேரங்களில் மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தவும் கூடும்.
செயல்முறை:
நான் சரியாக பேசுவதற்கு முயற்சி செய்தால், அதிகமாக பேசவேண்டிய அவசியம் இல்லை. நன்றாக - தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகள் கேட்பதற்கு இனிமையாகவும், மற்றவர்களை காயப்படுத்தாமலும் இருக்கின்றன. என்னுடைய பேச்சு, கருத்தை நோக்கி தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கும்போது, நான் லேசாகவும் சுதந்திரமாகவும் உணர்கின்றேன்.