18.10.24

இன்றைய சிந்தனைக்கு

ஒத்துழைப்பு:

அனைவரும் பொதுவான காரியத்திற்காக ஒன்றாக சேர்ந்து பணியாற்றும்போது, ஒத்துழைப்பு சுலபமாகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்களுடைய ஒத்துழைப்பை பெறுவதற்கு நாம் அந்த காரியம் மற்றும் காரியத்தை குறித்த தகவல்களை, சம்பந்தப்பட்டுள்ள அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது அவசியமானதாகும். நம்முடைய நோக்கத்தை, எளிமையான மற்றும் சுலபமான மொழியை பயன்படுத்தி தெரிவிக்கும்போது அனைவரும் புரிந்துகொள்வார்கள். இது, சம்பந்தப்பட்டுள்ள அனைவருடைய நன்மைக்காகவும் அனைவரும் இயற்கையாகவே தங்களுடைய சிறப்பானவற்றை செய்யும்போது, குழுஉணர்ச்சியை உருவாக்க உதவி செய்கின்றது.

செயல்முறை:

நான் பல்வேறுபட்ட மனிதர்கள் ஈடுபடும் புதிய காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது, நாம் தொடங்குவதற்கு முன்னரே நான் அனைவரிடமும் அனைத்தையும் பற்றி தெரியப்படுத்தவேண்டியது அவசியமாகும். சின்னஞ்சிறு தகவல்கள் கூட மற்றவர்களுடைய புரிந்துணர்வில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடிவதோடு, முக்கியத்துவத்திற்கேற்ப காரியங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு உதவி செய்யும். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒத்திசைவுடன் பணியாற்றும்போது, காரியங்களை விரைவாகவும் திறம்படவும் நம்மால் செய்து முடிக்க முடிகின்றது.