18.12.24

இன்றைய சிந்தனைக்கு......

சந்தோஷம்:      

சந்தோஷமாக இருப்பது என்பது, முழு உலகத்திலும் சந்தோஷ கதிர்களை பரப்புவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உண்மையில் நாம் சந்தோஷமாக இருக்கும்போது, நம்முடைய சந்தோஷமானது, சூரிய கதிரை போன்று முழு உலகையும் அடையும் படியாக, நாம் சந்தோஷத்தின் ஸ்வரூபமாக இருக்கின்றோம். இது, நம்முடைய ஆனந்தத்தை மற்றவர்கள் சிறிதளவாவது அனுபவம் செய்ய உதவி செய்கிறது.

செயல்முறை:

நான் சந்தோஷத்தை பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், அதை அனுபவிக்கவும் வேண்டும். அதன் பிறகு, அதை நான் என்னுடைய ஸ்வரூபத்தில் கொண்டுவருவது, அதை நான் மற்றவர்களுக்கு கொடுக்க கூடியதாகவும், அவர்களின் வாழ்க்கையை அது மாற்ற வல்லதாகவும் இருக்க வேண்டும்.