19.07.24

இன்றைய சிந்தனைக்கு

உற்சாகம்

தொடர்ந்து உற்சாகத்துடன் இருப்பது மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பிரச்சனைகள் எதிர்மறையான எண்ணங்களினால் நம்மை பாரமாக உணரச் செய்யலாம். பாரமான மனம் நாம் உற்சாகத்துடன் முன்னோக்கி செல்வதை தடுத்து விடுகிறது. அதன் பிறகு மற்றவர்கள் முன்னேற நாம் உதவுவதற்கு நமக்கு கடினமாக இருக்கிறது.

செயல்முறை:

நான் எவ்விதமான சூழ்நிலைகளை சந்தித்த போதிலும், உற்சாகத்தோடு இருப்பதற்கு நான்  விசேஷமான முயற்சி செய்வது அவசியம். உற்சாகம் எனக்கு தைரியத்தை கொடுப்பதோடுமற்றவர்கள் நன்மை அடைவதற்கு என்னுடைய தனித்துவமான திறமைகளை பயன்படுத்த உதவுகிறது. பிறகு, என்னுள் இருக்கும் நற்குணங்களை வெளிக்கொணர்ந்து மற்றவர்களின் நன்மைக்காக என்னால் அவற்றை பயன்படுத்த முடியும்.