19.12.24

இன்றைய சிந்தனைக்கு......

மாற்றம்:

ஒருவர் தனது மனோபாவத்தை மாற்றிக்கொள்வது என்பது உலகை மாற்றுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு குறிப்பிட்ட உறவுமுறையில் பிரச்சனை இருக்கும்போது, அந்த நபரை பற்றி ஆக்கபூர்வமாக நம்மால் சிந்திக்க இயலவில்லை. நம்முடைய எதிர்மறையான மனோபாவத்தினால் உருவாகும் எதிர்மறையான சூழலை விலக்குவது கடினமாகிவிடுகிறது. இது உறவுமுறையையும் சூழ்நிலையையும் மேலும் மோசமாக்கிவிடுகிறது.

செயல்முறை:

உறவுமுறையை மேம்படுத்துவதற்கான ஒரே வழி, அந்த நபரை பற்றிய நம்முடைய சொந்த மனோபாவத்தை மாற்றிக்கொண்டு, ஆக்கபூர்வமான சூழலை உருவாக்குவதாகும். இந்த உள்ளார்ந்த மௌனமான மாற்றமானது, மனிதர்களில் சூட்சுமான அதிர்வளைகளின் முலம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை உருவாக்குகிறது. என்னுடைய மனோபாவத்தை மாற்றிக்கொள்வதன் மூலம், எனக்கும் மற்றவர்களுக்கும், மேலும் ஒரு அழகான உலகை நான் உருவாக்குகின்றேன். அங்கு நான் இருப்பது, மனிதர்களில் ஒரு ஆக்கபூர்வமான தாக்கதத்தை ஏற்படுத்துகிறது.