20.01.25
இன்றைய சிந்தனைக்கு......
முயற்சி: செய்துமுடித்த ஒரு நல்ல செயலுக்காக ஒரு ஆசையை கொண்டிருப்பது பழுக்காத பழம் சாப்பிடுவதற்கு ஒப்பாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
ஒருவர் செய்த காரியத்திற்கு ஒரு விளைவைப் பெறுவதற்கு விருப்பம் கொள்வது பழுக்காத பழத்தை சாப்பிடுவதற்கு ஒப்பாகும். இது ஒரு பிடிக்க முடியாத நிழலைப் பின் தொடர்வது போலாகும். மறுபுறம், காரியங்களைச் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதால், முயற்சி செய்வதில் மகிழ்ச்சி உண்டாகும். இது சரியான நேரத்தில் கிடைக்கும் பலனை உறுதி செய்கிறது.
தீர்வு:
நான் காரியங்களை செய்வதில் மகிழ்ச்சி அடையும்போது, என்னால் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டு இருக்கவும் முடியும். என் நோக்கம் நோக்கி நான் முயற்சி செய்யும்போதும், நான் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளிலிருந்து விடுபட்டு இருப்பதால், நான் எந்த சிரமம் இல்லாமல் அனைத்தையும் அடைவதை காணமுடிகின்றது. நான் பொறுமையாக இருக்கிறேன், என் முயற்சியின் பலன் பழுப்பதற்கு மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்.