20.04.25

இன்றைய சிந்தனைக்கு

வளைந்துகொடுக்கும் தன்மை

வளைந்துகொடுப்பவராக இருப்பதென்றால், வாழ்க்கை கொண்டுவரும் அனைத்தையும் சந்தோஷமாக அனுபவிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: 

நாம் ஒரு நாளை முன்கூட்டியே திட்டமிடும்போது, சில சமயங்களில், நாம் திட்டமிட்டவாறு அனைத்து காரியங்களையும் நம்மால் செய்ய முடியாதிருப்பதை நாம் காண்கிறோம். எதிர்பாராத சூழ்நிலைகள் வருகின்றன. இச்சமயங்களில், நம்மால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. மேலும் நாம் செய்யவேண்டியவற்றை செய்ய சிரமமாக இருக்கிறது அல்லது நம்மால் சிறப்பாக செய்ய இயலவில்லை.

செயல்முறை:

நான், என்னுடைய தினசரி அட்டவணை பற்றி திட்ட வட்டமாக இருப்பதை போன்றே, என்னுடைய எண்ணங்களில் வளைந்து கொடுக்கும் தன்மையோடு இருப்பதும் முக்கியமானதாகும். வளைந்து கொடுக்கும் தன்மையானது, எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள என்னை அனுமதிப்பதோடு, என்னுடைய நேரம், வளங்கள் மற்றும் சந்தர்ப்பங்களை சிறப்பாக பயன்படுத்துவதற்கும், எனக்கு உதவி செய்கின்றது. நான் வளைந்து கொடுக்கும்போது, வாழ்க்கை கொண்டுவரும் அனைத்தையும் சந்தோஷமாக அனுபவம் செய்கின்றேன்.