20.06.24

இன்றைய சிந்தனைக்கு

புரிந்துகொள்ளுதல்:

சூழ்நிலைகளை, உள்ளதை உள்ளவாறே பார்ப்பது என்பது பலவீனங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எதிர்நோக்கும் சூழ்நிலைகளால், நம்முடைய உணர்வுகள் பாதிப்படைகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றிய உடனயே  அவற்றை மாற்ற நாம் முயற்சி செய்யலாம். ஆனால் சிலசமயங்களில், நம்முடைய ஒட்டுமொத்தமான குணாதிசியத்தினாலும், அல்லது தற்பொழுது நாம் மாற்ற முயற்சி செய்யும் ஒரு குணாதிசியத்தினாலும் அது தடுக்கபடுகின்றது.

செயல்முறை:

என்னுடைய கண்ணோட்டத்தை நான் நிச்சியமாக மாற்றிக்கொள்ள வேண்டும் – அதாவது, நான் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை உள்ளது உள்ளவாறே நான் புரிந்துகொள்வது, அவசியம். மேலும், என்னுடைய குணாதிசியத்தினால், என்னுடைய புரிந்துணர்வு பாதிப்படையக்கூடாது. சூழ்நிலைகளை உள்ளது போலவே, நான் பார்க்கும்போது, சூழ்நிலைகளை எதிர்த்துச் செயல்படுவதற்கு பதிலாக, சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னால் செயல்பட முடியும்.