20.07.24

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைதன்மை

ஸ்திரதன்மையின் சக்தியானது எவ்விதமான சூழ்நிலையையும் மாற்றக்கூடும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான சூழ்நிலையில், பெரும்பாலும் நம்முடைய முதல் எண்ணம் எதிர்மறையானதாக இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்கள் என்ற புயலினால் நாம் இழுத்து செல்லப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்பேற்பட்ட எண்ணங்களால் ஒரு பயனும் இல்லை. இது தீர்வுகளிலிருந்து மேலும் நம்மை தூர விலக்கி விடுகிறது.

செயல்முறை:

தினந்தோறும் ஒரு நேர்மறையான எண்ணத்தைப்பற்றி சிந்திப்பது, எனக்குள் இருக்கும் ஸ்திரதன்மையை பேணிக்காக்க உதவுகிறது. தொடர்ந்து செய்யும் பயிற்சியானது நான் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் உறுதியுடன் இருப்பதற்கு உதவும். மேற்கொண்டு வரவிருக்கும் எந்த சூழ்நிலையையும் சந்திப்பதற்கு என்னை தயாராக்குவதோடு, என்னை விழிப்படைய செய்து எனக்கு தேவையான யுக்திகளை கொடுத்து கடினமான சூழ்நிலைகளை வெற்றிகொள்வதற்கு என்னை ஆயத்தப்படுத்துகிறது.