20.10.24

இன்றைய சிந்தனைக்கு

உள்ளார்ந்த வலிமை:

என்னுடைய பலவீனங்களை நான் மேன்மேலும் வெற்றிகொள்ளும்போது, அதில் எனக்கும் மற்றவர்களுக்கும் அதிக நன்மை உள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மை அச்சுறுத்தும் சூழ்நிலைகளில் நம்முடைய பலவீனங்களின் மூலம் எதிர்த்து செயல்படுவதே பொதுவான விளைவாகும். அந்த விளைவினால் பிரச்சனை இருக்கின்றது: நம்முடைய பலவீனத்தை நாம் ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போது, அவை வலிமைபெறுவதோடு நம்முடைய சுபாவத்தில் பதிவாகி விடுகின்றது. 

செயல்முறை:

என்னுடைய பலவீனத்திலிருந்து என்னை நான் விடுவித்து கொள்ளும்போது மட்டுமே என்னால் மற்றவர்களுக்கும், எனக்கும் நன்மையை கொண்டுவரமுடியும் என்பதை நான் நினைவில் கொள்வது அவசியமாகும். இந்த எண்ணம் என்னுடைய குறைபாடுகளை வெற்றிகொள்வதற்கு, தொடர்ந்து முயற்சி செய்வதற்கு எனக்கு உதவி செய்யும்.