20.12.24

இன்றைய சிந்தனைக்கு......

சந்தோஷம்:

உண்மையான சந்தோஷம் நம்முள் இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எதிர்மறையான சூழ்நிலைகளில், நம்முள் இருக்கும் சந்தோஷத்தை விட்டுவிட்டு, வெளியே தேட முற்படுகின்றோம். நம்முடைய மனதை அந்த பிரச்சனையிலிருந்து விலக்குவதற்காக, தற்காலிகமான சந்தோஷத்தை பெற முயற்சி செய்கின்றோம் அல்லது, அந்த சூழ்நிலையிலிருந்து விலகிவிட முயற்சிக்கிறோம். இந்த இரண்டு விதமான முயற்சியும், பிரச்சனைக்கு தீர்வு காண நமக்கு உதவவில்லை.

செயல்முறை:

உண்மையான சந்தோஷத்தை அறிய, எனக்கு ஆத்மீக போஷாக்களித்து, எது எனக்கு உயிர்கொடுக்கும் என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டும். உள்ளார்ந்த சந்தோஷத்தின் மூலத்தை நான் கண்டுபிடித்துவிட்டால், இது மிகவும் கடினமான சூழ்நிலையிலும், ஸ்திரமாகவும் மாறாததாகவும் இருக்கும்.