21.06.24

இன்றைய சிந்தனைக்கு

சுய மரியாதை:

தன்னுடைய சொந்த பாகத்தை மதிப்பது என்றால் அதை சிறப்பாக நடிப்பது என்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும், நாம் நம்மை மற்றவர்களோடு - அதாவது அவர்களுடைய பண்புகள், வாழ்க்கையின் அந்தஸ்த்து அல்லது உடமைகளோடு ஒப்பிட்டு பார்க்கின்றோம். ஆனால், இது எப்போதும் உதவுவதில்லை. நாம் பெரும்பாலும் ஒட்டுமொத்த பாகத்தையும் பார்க்காததால், நம்மிடம் ஏதோ குறை இருப்பது போன்று உணர்கின்றோம். இது நம்முடைய சொந்த பண்புகளை பாராட்டுவதிலிருந்து நம்மை தடுக்கிறது.

செயல்முறை:

வாழ்க்கையில் என்னுடைய சொந்த பாகத்தின் தனித்துவத்தை புரிந்து கொண்டு, அதை ஏற்றுக்கொண்டு மேலும் அதை சிறப்பாக்குவதற்கு முயற்சி செய்வது முக்கியம். இதை நான் செய்யும்போது, வாழ்க்கை மேடையில் என்னுடைய பாகத்தின் நோக்கத்தை நான் பாராட்ட ஆரம்பிப்பேன். மேலும் என்னுடைய தனித்துவமான பேறுகளை சரியான வழியில் பயன்படுத்துவேன்.