21.07.24

இன்றைய சிந்தனைக்கு

சுய-கட்டுப்பாடு:

தன்னைத்தானே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே, உண்மையான கட்டுப்பாடு ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, கட்டுப்பாடு என்றால், மற்றவர்கள் மீதோ அல்லது சூழ்நிலைகளையோ நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று நாம் புரிந்துகொள்கின்றோம். சுய-கட்டுபாட்டை பற்றி மிக அரிதாகவே சிந்திக்கிறோம். அது மிகவும் கடினமாகவும் வலிகொடுப்பதகவும் உள்ளது. அதனால், நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள், நடத்தையை மாற்றுவது புதிராக இருப்பதோடு சுய-கட்டுபாட்டில் ஈடுபாடு கொள்வது கடினமாக இருக்கிறது.

செயல்முறை:

என் மீது நான் கட்டுபாடு வைத்திருப்பது என்பது மாஸ்டராக இருப்பதாகும். என்னுடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் நடத்தை, என் கட்டளையின் கீழ் இருப்பது அவசியம். இதுதான் உண்மையான சுய-கட்டுபாடு. இதை செய்வதற்கு, நான் எதற்கும் அடிமையாக இல்லாமல், ஒரு மாஸ்டராக இருப்பதை பயிற்சி செய்ய வேண்டும். நான் எந்த அளவிற்கு அதிகமாக ஒரு மாஸ்டராக இருப்பதை பயிற்சி செய்கிறேனோ, அந்த அளவிற்கு என்னுடைய அனைத்துமே இயற்கையாகவே என் கட்டளைக்கு கீழ் படியும்.