21.10.24
இன்றைய சிந்தனைக்கு
பொறுப்பு:
உண்மையான பொறுப்பு உள்ளார்ந்த லேசானதன்மை மற்றும் சந்தோஷத்தை கொண்டு வருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் ஏதாவது ஒன்றுக்காக அல்லது யாரோ ஒருவருக்காக பொறுப்பேற்கும்போது, அது பாரமாக இருக்கலாம். நம் மீது பொறுப்பு அதிகமாகும் போது, கூண்டில் அடைக்கப்பட்ட பறவை போல நாம் சிக்கிக்கொண்டதாக உணர்கின்றோம். நாம் தப்பிப்பதற்கும், நம்முடைய இறக்கைகளை விரிப்பதற்கும் ஆசைப்படுகிறோம். இவ்வாறு நாம் உணரும்போது, நம்முடைய பொறுப்புகளை நம்மால் முடிந்தளவு நாம் சிறப்பாக நிறைவேற்றுவதில்லை.
செயல்முறை:
சாதாரணமாக கடமைகளை மட்டுமே கவனித்துகொள்வது உண்மையான பொறுப்பாகாது; பொறுப்பு என்பது அதிக அளவு காரியத்தில் ஈடுபடுவதுடன் அனைத்தையும் நோக்கத்தை கருத்தில் கொண்டு செய்வதாகும். இந்த மனப்பான்மையோடு என்னுடைய பொறுப்புகளை பற்றி நான் சிந்திக்கும்போது, காரியங்கள் எளிதாக நடப்பதை காண்பதோடு, ஒவ்வொரு அடியிலும் நான் உதவி பெறுகின்றேன். நான் அதிகமான வேலையை லேசானதன்மையுடன் நிறைவேற்ற முடிவதோடு, நான் செய்கின்ற அனைத்தையும் நான் இரசிக்கின்றேன்.