21.12.24
இன்றைய சிந்தனைக்கு......
நேர்மறைதன்மை:
எதிர்மறையிலிருந்து நேர்மறையின் பக்கம் கவனத்தை மாற்றுவது என்பதே, நம்பிக்கையளிப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்மை எதிர்மறைதன்மை அனைத்து திசைகளிலும் சூழ்ந்துக்கொள்வதால், ஒவ்வொரு நாளும் நாம் அதிகம் கவலைபடுகின்றோம். நம்முடைய சராசரியான பேச்சுவார்த்தைகளிள் முழுக்க முழுக்க எதிர்மறைதன்மை நிறைந்திருக்கிறது. அதனால், நம்மை அறியாது, நாம் வாழ்க்கையில் ஒரு எதிர்மறையான அணுகுமுறையை கொண்டுள்ளோம்.
செயல்முறை:
மற்றவர்களுடனான என்னுடைய பேச்சுவார்த்தைகள் எதிர்மறையாக ஆகுவதை நான் அறிந்திருப்பது முக்கியமானதாகும். மேலும் ஆக்கபூர்வமாக இருப்பதற்கு நான் உணர்வுப்பூர்வமான மாற்றம் கொண்டுவந்து, வாழ்க்கை எனக்கு கொடுப்பதை பாராட்டுவது அவசியம். எனது வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்களை நான் கருத்தில் கொள்ளவில்லை. நான் ஆக்கபூர்வமானவற்றில் கவனம் செலுத்தும்போது, அது உற்சாகமளிக்கும் சுற்றுசூழலை எதிர்காலத்திற்கு உருவாக்கி, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கிறது.