22.01.25

இன்றைய சிந்தனைக்கு......

உள்ளார்ந்த சக்தி:

தீர்வுகளின் சொருபமாக இருப்பதென்றால் உள்ளார்ந்த சக்தியை அனுபவம் செய்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சவாலான சூழ்நிலைகளில், விஷயங்களை தெளிவாக பார்க்கக்கூடிய ஒருவரால் தீர்வைக் கொண்டு வர முடியும். நேர்மையுடன் காரியங்களை செய்வது என்பது விஷயங்களை தெளிவாகக் காண்பதைக் குறிக்கிறது. ஒரு அம்சத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடிந்த ஒருவர்,  இந்த கற்றலை பல விஷயங்களில் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது, மேலும் அவரது முழு ஆளுமையும் மாறுவதை காண்கிறார்.

தீர்வு:

நான் தொடர்ந்து தீர்வுகளை தேடும் போது என்னால் எனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடிகின்றது. ஒவ்வொரு அனுபவமும் எனக்கு புதியதொன்றை போதித்து, என்னை செழிப்படைய செய்கிறது. என்னுடைய கண்ணோட்டம் தொடர்ந்து  மாறிக்கொண்டே இருக்கிறது, மேலும் ஒவ்வொரு கடந்து செல்லும் சூழ்நிலையிலும் நான் மென்மேலும் நேர்மறையாக ஆகிவிடுகிறேன். எனவே வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலைகளிலும் நான் சக்திவாய்ந்தவனாக இருப்பதை காண்கின்றேன்.