22.04.25

இன்றைய சிந்தனைக்கு

அகத்தாய்வு

ஒருவருடைய சொந்த பலவீனத்திற்கான உண்மையான காரணத்தை புரிந்துகொள்வதென்றால், அதை வெற்றிகொள்வதற்கு சக்தி பெறுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முள் இருக்கும் பலவீனத்தை நாம் அறிந்துகொள்ளும்போது, பெரும்பாலும் அதை வெற்றிகொள்வதற்கு நாம் முயற்சி செய்கின்றோம். ஆனால் சிலசமயங்களில், நாம் சிறப்பான முயற்சிகள் செய்தபோதும், அதே பலவீனங்கள் திரும்ப திரும்ப தோன்றுகின்றன. இதற்கான காரணம்பிரச்சனைகளின்  மூலகாரணத்தை நாம் இன்னும் கண்டுபிடித்து, அதை அகற்றவில்லை என்பதாகும்.

செயல்முறை:

என்னுள் வேலை செய்கின்ற பலவீனத்தை நீக்க, நான் முயற்சி செய்யும் முன்னர், பலவீனத்திற்கான காரணத்தை நான் புரிந்துகொள்வது அவசியம். இதை செய்வதற்கு, ஏன் இந்த பலவீனம் உள்ளது என்றும், என்னுள் என்ன பற்றாக்குறை உள்ளது என்றும், நான் ஆழ்ந்து சிந்திப்பது அவசியம். காரணத்தை நான் கண்டுபிடித்தவுடன், அந்த பலவீனத்திற்கு தொடர்புடைய நற்குணத்தை, என்னுள் சுபாவமாக ஆக்கிக்கொள்ள நான் முயற்சி செய்யும்போது, இந்நற்குணங்கள், பலவீனத்தை வெளியேற்றிவிடும்.