22.06.24

இன்றைய சிந்தனைக்கு

கற்கும் பாடங்கள்:

கற்றறிந்திருக்கின்றோம் என்றால் நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து

ஒவ்வொரு சூழ்நிலையிலும், நாம் முக்கியமான பாடங்களை கிரகிக்கின்றோம். ஆனால் சில நேரங்களில், நாம் மீண்டும் மீண்டும் செய்த தவறுகளை திரும்ப செய்கின்றோம். நாம் பாடத்தை புரிந்து கொண்டாலும்கூட, நம்மால் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை.

செயல்முறை:

நான் ஒருமுறை, ஒரு தவற்றை உணர்ந்து அதிலிருந்து கற்றுக்கொண்டவுடன், அதைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதில் நேரத்தை செலவு செய்து அவசியம். அந்த தவற்றை ஒருபொழுதும் நான் திரும்பவும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். இது உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எனக்கு உதவி செய்கிறது.