22.07.24

இன்றைய சிந்தனைக்கு

சத்தியம் காப்பது:

என்னுடைய சத்தியத்தை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு அடியிலும் நன்மை இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும் நாம், நம்மிடமும் மற்றவர்களிடமும் சத்தியம் செய்கின்றோம். அந்நேரத்தில் நாம் நேர்மையாக இருந்தாலும், நடைமுறையில் சிலநேரங்களில் சத்தியம் நிறைவேற்றப்படுவதில்லை. நம்முடைய நோக்கங்களை நாம் செயல்படுத்தாவிட்டால் சத்தியம் பயனற்றது ஆகிறது.

செயல்முறை:

எனக்குள் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சத்தியத்தை நான் மேற்கொள்ளும்போது, நான் உடனடியாக, சத்தியத்தை நடைமுறைக்கு கொண்டுவர உதவும் செயல்முறைத் திட்டத்தை தீட்டுவது அவசியம். அந்த சத்தியத்தை நிறைவேற்றுவது ஏன் எனக்கு முக்கியம் என்பதை நான் புரிந்துகொள்வதும் அவசியம். அந்த காரியத்தை நிறைவேற்றும்வரை, நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை எனக்கு நானே மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.