23.03.25
இன்றைய சிந்தனைக்கு......
நம்பிக்கையுள்ளவர் எப்பொழுதும் கவலையற்றவராக இருக்கின்றார்.
சிந்திக்க வேண்டிய கருத்து: விஷயங்கள் தவறாகும்போது நாம் அதிகமாக கவலைக்கொள்கின்றோம். கடினமான நேரத்தில் நம் மனதில் பல வீணான கேள்விகள் நம்மைத் தொந்தரவு செய்கின்றன. இவ்வகையான வீணான எண்ணங்களில் இருந்து நாம் விடுபட முடியாமல் மேலும் கனமாக உணர்கிறோம்.
தீர்வு: அனைத்து நேரங்களிலும் பாரமற்று இலேசாக இருக்கும் வழி, விஷயங்கள் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதாகும். கடினமான சூழ்நிலையிலும்கூட, அதிலிருந்து நல்லது ஏதாவது தோன்றும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட நம்மை இலேசாக இருக்க உதவி செய்கின்றது.