23.12.24

இன்றைய சிந்தனைக்கு......

பற்றற்றதன்மை:

பற்றற்ற பார்வையாளராக இருப்பது நம்மை கதாநாயகனாக ஆக்குகின்றது

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் குறிப்பிட்ட முறையில் நடந்துகொள்வதிலோ அல்லது புரிந்துகொள்வதிலோ பற்றுடையவர் ஆகும்போது தடைகள் அல்லது சிரமங்கள் தோன்றுகின்றன. 

செயல்முறை:

நான் வெற்றியடைய வேண்டுமானால், என்னை ஒரு பற்றற்ற பார்வையாளராக நான் சிந்தித்து பார்க்க வேண்டும். அதாவது உடலுணர்விலிருந்து விடுபட்டு ஆத்ம உணர்விலிருந்து கேட்பதாகும். ஆத்மாவே என்னுடைய சிறந்த வழிகாட்டியாகும். மேலும் எப்படி கதாநாயகனாக ஆகுவது என்பதையும் காண்பிக்கும். ஆத்மாவை என்னுடைய எஜமானாக இருப்பதற்கு நான் அனுமதிப்பேன்.