24.01.25

இன்றைய சிந்தனைக்கு......

விசேஷமானவராக இருப்பதென்றால் நாம் சந்திக்கும் அனைவருக்கும் ஒரு பரிசை வைத்திருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: பொதுவாக நாம் மக்களுக்கு ஸ்தூல பரிசுகளை கொடுக்க தயாராக இருக்கிறோம்.  ஆனால் புரிந்துகொள்ளுதல் அல்லது அன்பின் வடிவத்தில் ஒரு கொடுப்பவர் என்ற நிலையில் இருக்கவேண்டியபோதுஎப்போதும் நம்மால் ஒரு கொடுப்பவராக இருக்க முடியவில்லை. நாம் பொதுவாக மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்க தொடங்குகின்றோம்.

தீர்வு: நாம் சந்திக்கிற அனைவருக்கும் ஒரு பரிசு நம்மிடம் உண்டு என்பதை உறுதி செய்யகொள்ள வேண்டும்அது ஒரு புன்னகை அல்லது ஒரு கனிவான வார்த்தையாக கூட இருக்கலாம். நாம் கொடுக்க வேண்டியதில் நம் கவனம் இருக்கும்போது, மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பத்திலிருந்து நாம் விடுபட்டு இருக்கின்றோம். இது நம்மை உண்மையிலேயே விசேஷமானவர் ஆக்குகின்றது.