24.04.25
இன்றைய சிந்தனைக்கு
சகிப்புத்தன்மை
உண்மை சக்தியை புரிந்துகொள்பவரே, சகிப்புத்தன்மை வாய்ந்தவராகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் கூறுவதை யாராவது நம்பாத போது, பொதுவாக, நாம் திரும்ப வாதாடி, நம்முடைய கருத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றோம். இருப்பினும், நாம் அதிமாக பேசும்போது, குறைவாகவே கேட்கப் படுகின்றோம், என்பதை நாம் காண்கின்றோம். அவர்களை சமாதானப்படுத்த இயலாமல், நாம் முடிவில் விரக்தியடைகின்றோம்.
செயல்முறை:
நான் கூறுவதை ஒருவர் ஏற்றுக்கொள்ளாதபோது, அவர் கூறுவது சரியானதாக இருக்கலாமோ என நான் சிந்தித்து பார்க்க வேண்டும். என்னுடைய கருத்தை நான் பிடிவாதத்துடன் பற்றிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், கற்றுகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக நான் இதை அரவணைக்க வேண்டும். என்னுடைய எண்ணங்கள் சரியாக இருந்தாலும் கூட, கோபம் அடையாமலோ அல்லது மறுக்காமலோ, மற்றவருடைய கருத்தை என்னால் கேட்டு புரிந்துகொள்ள முடியும்போது, நான் சகிப்புத்தன்மை வாய்ந்தவர் ஆகின்றேன்.