24.07.24

இன்றைய சிந்தனைக்கு

லேசானதன்மை

பிரச்சனைகளை விளையாட்டாக கருதி, முன்நோக்கி செல்வதே, லேசானதன்மை ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மக்கள், சவாலான சூழ்நிலைகளைமுடித்துவிடவேண்டிய பிரச்சனைகளாக கருதுகின்றனர். பெரும்பாலும், சூழ்நிலைகளையோ அல்லது அதில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களையோ  நாம் தவிர்கின்றோம். மேற்கொண்டு, அனைத்தும் மாறிவிடவேண்டும் என்றும் விரும்புகின்றோம். சவால்மிக்க சூழ்நிலை கடந்து சென்றவுடன், நாம் சக்தியிழந்தவராக உணர்கின்றோம்.

செயல்முறை:

பிரச்சனைகள் வெறும் விளையாட்டு என்று நான் புரிந்துக்கொண்டால், நான் செய்ய வேண்டிய பாகத்தை என்னால் நடிக்கமுடியும். அப்போது, மிகவும் கடினமான பிரச்சனையை நான் சந்தித்தாலும், நடப்பதில் இருக்கும் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொண்டுள்ளதால், என்னால் சிறப்பாக செயல்படமுடியும். நான் லேசாக உணர்வதோடு சந்தோஷமாகவும் இருக்கின்றேன். பிரச்சனைகள் என்னை கட்டுபடுத்த நான் அனுமதிக்காததால், என்னால் அவற்றை திறமையாக கையாள முடிகின்றது.