25.01.25
இன்றைய சிந்தனைக்கு......
வீணான எண்ணங்களை முடிக்கும் வழிமுறையானது மனதை அன்போடு கையாள்வதில் உள்ளது.
சிந்திக்க வேண்டிய கருத்து: மனதில் இருக்கும் வீணான எண்ணங்களை ஒருவர் நிறுத்த முயற்சி செய்யும்போது அது கடினமாக இருக்கிறது. அசௌகரியமும் சிரமமும் அனுபவமாகின்றது. அதற்கு மாறாக மனதை அன்போடு சரியான திசையில் செல்ல கற்றுக் கொடுக்கும்போது விரைவான வியத்தகு மாற்றம் உள்ளது.
அனுபவம்: என் மனதோடு அன்போடு பேசும் கலையை நான் கற்றுக் கொள்ளும்போது, எவ்வித எதிர்மறைதன்மையும் இல்லாமல் வீணான எண்ணங்களிலிருந்து என்னால் விடுப்பட்டு இருக்கமுடிகின்றது. மனதை ஒருமுகப்படுத்துவதும் கூட மிக எளிதாக இருப்பதோடு, அனைத்து எண்ணங்களும் ஒரே சரியான திசையை நோக்கி இயக்கப்படுகிறது.