25.04.25

இன்றைய சிந்தனைக்கு

ஞானம்

ஞானத்தை நடைமுறைப்படுத்துவது என்றால் வெற்றியை உறுதிப்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, தத்துவமும் பயிற்சியும் இரண்டு வெவ்வேறான விஷயங்களாகும். நமக்கு பெருமளவு ஞானம் உள்ளது. ஆனால், அதை நாம் நடைமுறைப்படுத்துவதில்லை. எடுத்துக்காட்டாக, எப்படி நாம் ஒன்றை செய்யலாம் என நாம் பேசக்கூடும், ஆனால் உண்மையில் அதைச் செய்வதற்கு தேவையான முயற்சியை நாம் செய்வதில்லை. காரியத்தை நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும், நாம் அவற்றைப்பற்றி சிந்திப்பதில் நேரத்தை வீணாக்குகின்றோம்.

செயல்முறை:

நான் ஞானத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்வது அவசியமாகும். முதல் அடியானது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதாகும். அதன்பிறகு, அவற்றை நடைமுறைப்படுத்தி, என்னுடைய எண்ணங்களை நான் தக்கவைத்துக்கொள்வது அவசியமாகும். அப்போது, என்னுடைய வாழ்க்கை செழுமை ஆகுவதோடு மட்டுமல்லாமல், என்னுடைய அனைத்து எண்ணங்களிலும் சக்தி நிரம்பி இருக்கும்.