25.06.24

இன்றைய சிந்தனைக்கு

நேர்மை:

நேர்மை பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பிரச்சனைக்கான நம்முடைய பதில், பிரச்சனைகளையும் அல்லது மக்களையும் கை விட்டுவிடுவதாகவோ அல்லது ஓடி விடுவதாகவோ இருந்தால், நம்மை நாமே ஏமாற்றிகொள்கின்றோம். நாம் எங்காவது ஓடிவிடுவதன் மூலம் சூழ்நிலையை நம்மால் தவிர்க்க முடியாது, அது வெறுமனே தாமதப்படுத்தபடுகிறது. பிரச்சனைகளை அணுகுவதற்கு பதிலாக, நாம் அதிலிருந்து விலகிக்கொள்ள முயற்சி செய்தால், நாம் மீண்டும் மீண்டும் அதே சிரமங்களை அனுபவம் செய்வதை நம்மால் காண முடியும்.

செயல்முறை:

சூழ்நிலையை மாற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, என்னிடமே நான் நேர்மையாக இருந்து, பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனது பலவீனங்களை கவனிப்பது அவசியம். நான் அதை அறிந்துகொண்டதும், என்னால் அதை மாற்றுவதற்கு முயற்சி செய்ய முடிவதோடு எதிர்காலத்தில் பிரச்சனைகளை வெற்றிகொள்ளவும் முடியும்.