25.07.24

இன்றைய சிந்தனைக்கு

சுதந்திரம்

யாருடைய மனம் சுதந்திரமாக இருக்கிறதோ, அவர்தான் மற்றவர்களுக்கு நன்மையை கொண்டுவர முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும், சுயத்திற்கு போதுமான நேரம் இல்லாதிருப்பதாக நாம் உணர்கின்றோம். ஆனால், அதிகமாக நம்மைப்பற்றியே நாம் சிந்திக்கும்போது, சிறிதளவு நேரமே மற்றவர்களுக்காக நம்மிடம் உள்ளது. நம்மால், நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை கொண்டுவரமுடியாமலேயே நாட்கள் கடந்துவிடுகிறது.

செயல்முறை:

எந்நேரமும் என்னைப்பற்றியே சிந்திப்பதற்கு பதிலாக, மற்றவர்களுக்கு உதவுவதால், எனக்கு நானே இயற்கையாகவே உதவி செய்துகொள்கின்றேன் என்பதை நான் உணர்ந்துகொள்வது அவசியம். இதை செய்வதற்கு, முதலில் என்னுடைய சொந்த மனதில் நான் உருவாக்கிய சங்கிலிகளிலிருந்து என்னை நான் விடுவித்துக்கொள்வது அவசியம். நான் சுதந்திரம் பெற்றவுடன், என்னால் முன்னேறிச் சென்று, என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் என்னால் நன்மையை கொண்டுவர முடியும்.