25.10.24
இன்றைய சிந்தனைக்கு
கருத்து பரிமாற்றம்:
கேட்கும் கலை என்னை சுற்றி உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு எனக்கு உதவுகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
ஒருவரோடு எனக்கு நேர்மறையான அனுபவங்கள் மட்டுமே இருந்தபோதிலும் அவரை பற்றி ஏதாவது எதிர்மறையாக நான் கேட்க நேரிடும் போது பெரும்பாலும், அதனால் நான் பாதிப்படைகின்றேன். இது அந்த நபரை பற்றிய என்னுடைய மனோபாவத்திலும் நடத்தையிலும் மாற்றத்தை கொண்டுவருகின்றது.
செயல்முறை:
சரியான வழியில் பதிலளிக்க என்னை அனுமதிப்பதற்கு நான் கேட்கும் கலையை கற்றுக்கொள்வது அவசியமாகும். ஒருவர் மற்றவரை பற்றி எதிர்மறையான கண்ணோட்டத்தில் விவரிக்கும்போது அந்த நபர் அக்கணத்தில் என்ன சிந்திக்கின்றார் எனவும் எவ்வாறு உணர்கின்றார் எனவும் நான் புரிந்துகொள்வது அவசியமாகும். இவ்வாறு நான் செய்யும்போது, பாரபட்சமில்லாமல் என்னால் அவருக்கு அதரவு கொடுக்க முடியும்.