26.01.25
இன்றைய சிந்தனைக்கு......
மன உறுதிபாட்டு சக்தியானது அனைத்து எண்ணங்களையும் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து: நடைமுறையில் உடனடியாக வர வேண்டிய அநேக எண்ணங்கள் நம் மனதில் இருக்கின்றன. நேரத்தின் கட்டாயங்களுக்கு ஏற்ப அல்லது நம் தொடர்பில் வரும் நபர்களின் அடிப்படையில் இந்த எண்ணங்கள் வந்துள்ளன. ஆனால் இந்த எண்ணங்களை நடைமுறையில் கொண்டு வருவதற்கான ஒரே வழி, உறுதிப்பாட்டின் சக்தியைப் பயன்படுத்துவதாகும். எங்கு உறுதிப்பாடு இருக்கின்றதோ அங்கு அந்த சிந்தனையின் உணர்திறனுக்கான அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதற்கான உறுதி இருக்கின்றது.
அனுபவம்: என்னால் மன உறுதிபாட்டு சக்தியை பயன்படுத்த முடியும்போது, என் உள்ளார்ந்த திறனை உணர்ந்து கொள்வதுடன் சரியான வழியில் அதை பயன்படுத்த முடிகின்றது. எனவே எனது முன்னேற்றத்தை அனுபவம் செய்ய முடிகின்றது, ஏனென்றால் என் அனைத்து எண்ணங்களும் என்னுடைய சொந்த சுய முன்னேற்றத்திற்காக இருப்பதால், இந்த எண்ணங்கள் இயற்கையாக நடைமுறையில் வந்துவிடுகின்றன. நான் தற்காலிக பின்னடைவுகள் எதற்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன். ஆனால் சுயத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அனைத்தையும் என்னால் செய்ய முடிகின்றது.