26.07.24

இன்றைய சிந்தனைக்கு

பொறுமை:

திடமான நோக்கத்தோடு, பொறுமையும் சேரும்போது, வெற்றி பெறப்படுகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், நம்முடைய பொறுமை குறைவால் ஒரு காரியத்தை முடிக்கும் முன்பே நாம் அதை கை விட்டுவிடுகின்றோம். மேற்கொண்டு, ஏன் இவ்வாறு நடந்தது என்று நாம் கேள்வி கேட்பத்தோடு, நம்மையே தோல்வியாகக் கருத  ஆரம்பிக்கின்றோம்.

செயல்முறை:

ஒவ்வொரு முறையும் நான் ஒரு புதிய காரியத்தை தொடங்கும்போது, திடமான நோக்கத்துடன் பொறுமையையும் கிரகிப்பது அவசியம். பொறுமை, என்னுடைய முயற்சிக்கான பலனை நான் அடையும் வரை காத்திருக்க எனக்கு உதவி செய்கிறது. நான் பொறுமையாக, அவசரப்படாமல் இருந்தால், என்னுடைய  முயற்சியின் முடிவு  உடனடியாக புலப்படவில்லை என்றாலும்கூடநான் அக்காரியத்தை கைவிட்டு விடமாட்டேன். அதன்பின் நான் தோல்வியை ஒருபொழுதும் அனுபவம் செய்ய மாட்டேன்; தொடர்ந்து வெற்றியை நோக்கி மட்டுமே பயணிப்பேன்.