26.10.25

இன்றைய சிந்தனைக்கு......

உண்மையான பற்றற்றதன்மை என்பது நாம் பயன்படுத்தும் அனைத்திற்கும் ஒரு மாஸ்டராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: பொதுவாக பற்றற்றதன்மை என்பது நாம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து தூர இருப்பது என்று தவறாகப் புரிந்துக்கொள்ள படுகிறது, ஏனென்றால் பொதுவாக கிடைக்கின்ற வசதிகளைப் பயன்படுத்துகையில் நாம் அவற்றை சார்ந்து இருக்கும் போக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம். இவ்வாறு சார்ந்திருப்பது என்பது தொந்தரவாக இருக்கிறது.  எனவே சில நேரங்களில் இந்த வசதிகளை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவது தான் இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் விடுதலையாக இருக்கும் பற்றற்றதன்மை என்று கருதி நாம் அவற்றை கைவிட்டு விடுகிறோம்.

தீர்வு: நாம் பயன்படுத்தும் வசதிகளிலிருந்து நாம் மனதளவில் பற்றற்று இருப்பதில்தான் தீர்வு உள்ளது. அதாவது, நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவற்றை நாம் சார்ந்து இருப்பதில்லை. இதற்காக, நாம் படைப்பவர் நமக்கு கிடைக்கின்ற எவ்வித வசதிகளும் படைப்பாகும்  என்பதை நினைவூட்டிகொள்ள வேண்டும். இது அனைத்தையும் ஒரு மாஸ்டராக இருந்து உபயோகிக்க நமக்கு கற்றுக்கொடுப்பதோடு அவற்றின் மீது கட்டுப்பாட்டை பிரயோகிக்கவும் உதவுகிறது.