27.01.25

இன்றைய சிந்தனைக்கு......

அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பவர் சரியான முடிவுகளை எடுகின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து: எதிர்மறையான சூழ்நிலைகளில் மன அழுத்தத்திற்கு ஆளாவது மனித மனதின் இயற்கையான இயல்பாக உள்ளது. ஒரு சவாலான சூழ்நிலை இருக்கும்போது, அமைதியான மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாக உள்ளது. ஆனால் உள்ளுக்குள் சென்று உள்ளார்ந்த அமைதியை உணரும் திறன் உள்ள ஒருவரால் சிந்தனையில் தெளிவாக இருந்து சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

என்னால் உள்ளார்ந்த அமைதியை அனுபவம் செய்ய முடியும்போது, என் சிந்தனையில் என்னால் தெளிவாக இருக்க முடிகின்றது. இந்த தெளிவுடன் என் மனதில் மிகவும் இயல்பாகவே வெளிவரும் சரியான முடிவுகளையும் தீர்வுகளையும் கவனிக்கின்றேன். எனக்கு முடிவுகளை எடுக்க வேண்டிய சிரமம் இல்லைஆனால் அனைத்து முடிவுகளும் எளிதாக எடுக்கபடுவதோடு அவை சரியானவையாகவும் கூட இருக்கின்றது.