27.06.24

இன்றைய சிந்தனைக்கு

பகிர்ந்து கொள்வது:

உண்மையான சந்தோஷம் என்பது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பகிர்ந்து கொள்வதை பற்றி நாம் சிந்திக்கும்போது, அது உண்மையாகவே நன்மை பயக்குமா என்று சிலநேரங்களில் நாம் வியக்கின்றோம். பெரும்பாலும், பகிர்ந்துகொள்ளும்போது, அதன் விளைவாக நாம் ஏழ்மை அடைந்துவிட்டதாக, மக்கள் நம்புகின்றார்கள். நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய நபர் மட்டுமே நன்மை அடைவார் என்று நாம் நினைக்கும் போது, நம்முடைய நேரத்தையும் வளத்தையும் பகிர்ந்துகொள்வது நமக்கு சிரமமாக இருப்பதை நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

நம்முடைய உள்ளார்ந்த நற்குணங்களை பகிர்ந்துக்கொள்ளும்போது, நாம் நன்மை பெறுகின்றோம். நாம் ஒவ்வொரு முறையும் நற்குணங்களின் அடிப்படையில் நடந்துக்கொள்ளும்போது மற்றவர்களிடமிருந்து நாம் திரும்ப நற்குணங்களை அனுபவம் செய்வது மட்டுமல்லாமல், நமக்குள்ளும் அப்பண்பை அனுபவம் செய்கிறோம். நம்முடைய ஸ்தூல வளங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அதன் பலனைக் காட்டிலும் நம்முடைய சொந்த அனுபவம் முக்கியமானதாகும். பகிர்ந்து கொள்ளும் அனுபவமானது, மற்றவர்களை நம்மிடம் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கிறது.