27.07.24

இன்றைய சிந்தனைக்கு

அகநோக்கு:

ஒவ்வொரு செயலிலும் கவனம் செலுத்துவது என்பது கதாநாயகனாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கதாநாயகன் என்ற பாத்திரம் அனைவரையும் கவருகின்றது. மக்களின் புகழை பெற அனைவரும் ஒரு பதவியில் இருப்பதற்கு விரும்புகிறார்கள். மக்கள் நம்மை புகழும்போது, நாம் நன்றாக உணர்கிறோம் - அவர்கள் புகழாதபோது நாம் ஏமாற்றமடைகின்றோம். நம்மைப்பற்றி நாம் நன்றாக உணர, நாம் மற்றவர்களை சார்ந்து இருக்கிறோம். ஆனால் மற்றவர்களுடைய கருத்துக்கள் நம்பக்கூடியதாக இல்லை.

செயல்முறை:

நான் செய்யும் அனைத்திலும் கவனம் செலுத்தும்போது, நான் ஒரு கதாநாயகன் ஆகின்றேன். என்னுடைய வார்த்தைகள் அல்லது செயல்கள் எதுவுமே வீணானவையாகவோ அல்லது சாதாரணமாகவோ இல்லாதிருப்பதை நான் உறுதி செய்வது அவசியம். மேற்கொண்டு, நான் செய்யும் அனைத்தையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பேன். இவ்வாறு, நான் கவனம் செலுத்தும்போது, என்னால் அனைத்து நேரங்களிலும் என்னுடைய சிறப்பான திறமைகளை கொடுக்க முடியும். நான் என்ன செய்கின்றேன் என்பதைக் காட்டிலும், நான் எவ்வளவு சிறப்பாக செய்கின்றேன் என்பதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதால் நான் திருப்தியடைவதை உணர்வேன்.