27. 09.25
இன்றைய சிந்தனைக்கு......
சுய-இராஜ்ஜிய அதிகாரி :
ஒர் சுய-இராஜ்ஜிய அதிகாரியாக இருப்பதென்றால் கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
ஓர் சுய-இராஜ்ஜிய அதிகாரியாக இருப்பவர் ஒருபொழுதும் கட்டுப்பாடில் இருப்பதை சிரமமாக உணர்வதில்லை. அவர் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி, மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. சுயத்திற்கு ஆணையிட்ட அந்த ஷணத்தில், ஒவ்வொரு எண்ணம், வார்த்தை மற்றும் செயல் உடனடியாக ஆணைக்கு கட்டுபட்டு இருகிறது.
தீர்வு:
ஒர் சுய-இராஜ்ஜிய அதிகாரியாக இருப்பதென்றால் என்னுடைய சொந்த சிறப்பு அம்சங்களை விழிப்புணர்வில் வைத்து அவற்றை காரியத்தில் ஈடுபடுத்துவதும் ஆகும். நான் ஒர் சுய-இராஜ்ஜிய அதிகாரியாக இருக்கும்போது, நான் சுதந்திரமாக இருப்பதை உணர்கின்றேன். இது ஏனென்றால் எதுவும் என்னை பிணைப்பதில்லை, ஆனால் என் பலவீனங்களை வென்றெடுக்க முடியும். எனவே நான் எல்லா சூழ்நிலைகளிலும் முழு மகிழ்ச்சியாக இருப்பேன்.