27.10.24

இன்றைய சிந்தனைக்கு

மனஉறுதி:

மனஉறுதி, தடைபாடுகள் உருவாக்கும் தடுப்புகளை உடைக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தடைபாடுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்: அவற்றை நம்மால் தவிர்க்க இயலாது. அவை தோன்றும்போது, அவை பெரும்பாலும் தடுப்புகளை உருவாக்கி  நம்மை முன்னோக்கி செல்வதிலிருந்து தடுத்து விடுகின்றது. நாம் சிக்கிகொள்வதோடு, முன்னோக்கி செல்ல முடியாத இயலாமையினால் விரக்தியடைகிறோம்.

செயல்முறை:

எப்பொழுதெல்லாம் கடினமான சூழ்நிலையை சந்திக்கின்றேனோ அப்போது, அவற்றை தடைகளாக பார்க்காமல் முன்னேற்றதிற்கான படிகற்களாக பார்க்கவேண்டும் என என்னுள் நினைவு செய்வது அவசியமாகும். ஒன்றிலிருந்து மற்றொன்றை செய்வதற்கு மிகப்பெரிய முயற்சி எடுக்கும்போதிலும், வெற்றியடைவதற்கான என்னுடைய மனஉறுதி எனக்கு தேவையான பலத்தை கொடுக்கும்.