28.01.25

இன்றைய சிந்தனைக்கு......

தொடர்ந்து நேர்மறைதன்மையை நோக்கி கவனம் செலுத்துவது என்பது பதற்றத்திலிருந்து விடுபட்டு இருப்பதற்கு வழிவகுக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து: நேர்மறைதன்மையில் கவனம் செலுத்துவது என்பது வீணான, எதிர்மறையான அல்லது சாதாரணமானதை கூட சிந்திக்காமல், பேசாமல் அல்லது செய்யாமல் இருப்பதாகும். இவ்வழியில் கவனத்தைத் தக்க வைத்துக் கொண்டு வெளியிலிருந்தும் எந்தவொரு எதிர்மறையையும் உள்ளே  அனுமதிக்காமல் இருக்கின்றவர்,  எப்போதும் பதற்றத்திலிருந்து விடுபடுகிறார். அத்துடன் கிடைக்கும் அனைத்தும் சரியான முறையில்  பயன்படுத்தபடுகின்றன.

அனுபவம்: நான் தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன் ஒரு நல்ல நோக்கத்திற்காக உள்ளார்ந்த பொக்கிஷங்களை பயன்படுத்தும்போதுஉள்ளார்ந்த ஆற்றல் பயன்படுத்தபடுகிறது. இவ்விதத்தில் இந்த ஆற்றல் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தபடும்போது, சூரிய ஒளி இருளை முடித்துவிடுவதை போல் எதிர்மறைத்தன்மையும் முடிவடைந்துவிடுகிறது.