28.06.24

இன்றைய சிந்தனைக்கு

மனசாந்தி:

உள்ளார்ந்த சாந்தமான நிலையை பராமரிப்பது என்றால், சரியான தீர்வுகளை காண்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒரு பிரச்சனையை அல்லது கடினமான சூழ்நிலையை சந்திக்கும்போது, அவற்றை கவலை அல்லது எதிர்மறையான எண்ணங்களோடு எதிர்நோக்கும் மனப்போக்கு நம்மிடம் உள்ளது. வெளித்தோற்றத்திற்கு நாம் பிரச்சனையை எதிர்நோக்குவதாக தோன்றினாலும், அதை நம்மால் சமாளிக்க முடியவில்லை. பெரும்பாலான நேரங்களில், நாம் தோல்வியடைவதை நம்மால் காண முடிகிறது.

செயல்முறை:

முதலில் மனதை அமைதிப்படுத்துவது பிரச்சனையை அணுகுவதற்கு சிறப்பான வழியாகும். அமைதியான மனதினால் மட்டுமே பிரச்சனைகளுக்கு விடை காண முடியும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு விடை உள்ளது என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும். மனமானது ஓய்வாக இருக்கும்போது, ஏற்கனவே அங்கு இருக்கும் விடையை அறிவதற்கான என்னுடைய உள்ளுணர்வை என்னால் நம்ப முடிகிறது.