28.07.24

இன்றைய சிந்தனைக்கு

மகிழ்ச்சி

மகிழ்ச்சியாக இருக்கும்போது படைப்பாற்றல் இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சவால்மிக்க சூழ்நிலைகள் நம் வழியில் குறுக்கிடும்போது, ஒரேமாதிரியான வழியில் சிந்தித்து, பிரச்சனையை வெற்றிகொள்ள முயற்சிக்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதாவதுதீர்வை தேடி, மனம் மீண்டும் மீண்டும் அதனையே சிந்திக்கிறது. இது நீண்ட நேரம் நீடிக்கும்போது, தீர்வு கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமாகிறது.  அதனால் அங்கு சந்தோஷம் அல்லது மன நிம்மதி இருப்பதில்லை.

செயல்முறை:

மகிழ்ச்சி, மனதை தொட்டு உள்ளிருக்கும் படைப்பாற்றலை வெளிகொண்டுவர உதவுகிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, என்னால் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சிறப்பான முறையில் பயன்படுத்த முடிகிறது. மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவர் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க மாட்டார். ஆனால் ஒவ்வொரு நொடியிலும் படைப்பாற்றலை கண்டுபிடிப்பார். இவ்வாறு நான் எதையாவது புதிதாக, தனித்துவமானதாக மற்றும் வித்தியாசமாக செய்யும்போது, நான் மிகவும் சிறப்பாக செய்துள்ளேன் என்ற திருப்தியுடனும் இருப்பேன்.