29.06.24

இன்றைய சிந்தனைக்கு

களைப்பற்றதன்மை:

களைப்பற்றதன்மை என்பது சோர்வடைந்த உணர்வே இல்லாமல் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

களைப்பற்றதன்மை என்பது உடலின் ஆற்றலை மட்டும் பொருத்ததல்ல; அது பெருமளவு ஆத்மாவின் ஆற்றலை சார்ந்துள்ளது. களைப்பற்றதன்மை என்பது வாழ்க்கையினுடைய அழகையோ அல்லது பொலிவையோ எந்த ஒரு விஷயமும் அதன்பக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் இருப்பதாகும். வாழ்க்கை கொண்டுவரும் பல்வேறு விதமான சூழ்நிலைகளை பாராட்டுவதால் களைப்பற்றதன்மை ஏற்படுகின்றது. இது மேற்கொண்டு, அனைத்து சூழ்நிலைகளிலும் நாம் ஸ்திரமாக இருப்பதற்கு உதவுகிறது.

செயல்முறை:

மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், வாழ்க்கையின் அழகை என்னால் சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்பதை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்வது அவசியம். வெற்றியை சந்தோஷமாக அனுபவிப்பதை போன்று, என்னுடைய தோல்வியிலிருந்து நான் கற்றுக்கொள்வதை பற்றியும் நான் சந்தோஷபட வேண்டும். இது என்னை முன்னோக்கி செல்ல அனுமதிக்கிறது. மேலும், இதன் மூலம் கடினமான சூழ்நிலைகளில் எனக்குள் அதிக ஆற்றல் இருப்பதை என்னால் காணமுடிகின்றது.