29.07.24

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைதன்மை

நம் சித்தனை எவ்வாறோ, நம் உலகமும் அவ்வாறே.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய சிறப்பான முயற்சிக்கு பிறகும், காரியங்கள் நாம் எதிர்பார்த்தவாறு நடக்காத போது, மனம் தளரும் போக்கு நம்மிடம் இருக்கிறது. இந்த எதிர்மறை எண்ணங்கள், மேற்கொண்டு எதர்மறையான சூழ்நிலைகளை கொண்டுவருகிறது. அதனால் வாழ்க்கை தரம் மேம்படாததை நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

தவறாக போய் கொண்டிருக்கின்ற சூழ்நிலைகளை மாற்ற ஆரம்பிப்பதற்கு பதிலாக, நான் இச்சூழ்நிலைகளுக்கு காரணமான விதையை அதாவது, என்னுடைய எண்ணங்களை சரிபடுத்துவது அவசியம். அனைத்து சூழ்நிலைகளிலும் என்னுடைய எண்ணங்களை நேர்மறையாக வைத்திருப்பது அவசியம்.  இது என்னுடைய செயல்களை நேர்மறையானதாக ஆக்குவதோடு, படிப்படியாக சூழ்நிலைகள் சிறப்பாக மாறுவதையும் நான் காண்பேன்.