29.10.24

இன்றைய சிந்தனைக்கு

ஒத்துழைப்பு:

உண்மையான முன்னேற்றம் ஒத்துழைப்பு சக்தியில் இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

இன்றைய உலகில், பெரும்பாலும் போட்டி போடுவதை முன்னேற்றத்திற்கான வழி என நாம் சிந்திக்கின்றோம். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுகொள்வது, நம்மை சிறப்பாக செய்வதற்கு ஊக்குவிக்ககூடும். சிலசமயங்களில், நம்முடைய சொந்த முன்னேற்றம் பாதிப்படையக்கூடிய  காரணத்தினால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதை தவிர்க்கின்றோம். ஆனால் அனைத்தையும் நாமே சுயமாக செய்ய முடியாது என்பதை நாம் பெரும்பாலும் கவனிக்க தவருகின்றோம். நாம் உண்மையான வெற்றியை அனுபவம் செய்ய வேண்டுமானால், நாம் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு கற்றுக்கொள்வது அவசியமாகும்.

செயல்முறை:

உண்மையான ஒத்துழைப்பு என்பது மற்றவர்களுக்கு உதவி செய்வதும் அவர்கள் நமக்கு உதவி செய்வதற்கும் அனுமதிக்கும் ஆற்றலாகும். மற்றவர்கள் எனக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அதிகம் உள்ளது என்பதும் அவர்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதையும் நான் கற்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் நான் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதற்கு கற்றுக்கொள்ளும்போது, நாம் அனைவரும் அதிக முன்னேற்றம் அடைகின்றோம்.