29.10.25
இன்றைய சிந்தனைக்கு......
நம் வார்த்தைகள் தூய எண்ணங்கள் மற்றும் உற்சாகமூட்டும் செயல்களுடன் இணைக்கும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து: ஒருவரின் தவறுகளை கண்டறிந்தவுடன், நம் வார்த்தைகளால் திருத்தம் கொடுப்பது நமக்கு இயற்கையானது. நாம் மற்றவர்களுக்கு அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்க முற்படுகிறோம். சரியானதை கூறிய பிறகும்கூட நாம் சொல்வதைக் கேட்காமல் இருக்கும்போது நம்முடைய வார்த்தைகளை வீணாகப்பட்டது என்பதை நாம் காண்கின்றோம். அவ்வாறான சூழ்நிலையில் பிரச்சனை எங்குள்ளது என்று நமக்கு புரியவில்லை.
தீர்வு: மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் திருத்தங்களைச் அவர்கள் செயல்படுத்துவதற்கு, நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் இணைந்திருக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களில் நல்லாசிகள் இருக்க வேண்டும், இது நம் வார்த்தைகளில் இனிமையை கொண்டுவருகின்றது. அதன் கூடவே நாம் பேசிக்கொண்டிருக்கும் அனைத்தையும் நம் நடவடிக்கைகளில் நாம் கொண்டுவர வேண்டும் என்பதை நாம் கவனித்தில் வைக்க வேண்டும். இதைச் செய்யும்போது நம் வார்த்தைகள் மிகவும் பயனுள்ளவையாக இருப்பதைக் நம்மால் பார்க்கமுடிகின்றது.